Sunday, 23 June 2013

தளபதி தளபதி - தலைவா (Thalaivaa - Thalapathy Thalapathy Lyrics)


தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா 
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா 
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம் 
பின்னால் நிழலாய் வருவோம் 
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம் 
விழுந்தால் விதையாய் எழுவோம் 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

தலைவா தலைவா தலைவா தலைவா 
தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா 

எதிரிகள் எதிரிகள் தம் தம் 
அலறிட அலறிட தம் தம் 
அனலென புறப்படு தம் தம் தோழா 
கெட்டதை கண்டதும் தம் தம் 
பட்டென சுத்திட தம் தம் 
கட்டளை இட்டிடு தம் தம் தோழா 

பிறர் துன்பம் தன துன்பம் போல் எண்ணினால் 
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் 
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே 
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான் 
உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை 
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை 
தலைவா தலைவா உயிர்நீ தலைவா 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

ஒருவிழி எரிமலை தம் தம் 
மறுவிழி பனிமலை தம் தம் 
இவனுக்கு நிகரில்லை தம் தம் தோழா 
நிலமது அதிர்ந்திட தம் தம் 
கடலது பொங்கிட தம் தம் 
கர்ஜனை புரிவான் தம் தம் தோழா 

அச்சங்கள் உனைகண்டு அச்சப்பட 
உச்சத்தை தொடவேண்டும் முன்னேறு நீ 
பத்தோடு பதினொன்று நீ இல்லையே 
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதானே நீ 
ஊரெங்கும் சந்தோசம் விளையாடுதே 
உன்னாலே அன்பெங்கும் அலைபாயுதே 
தலைவா தலைவா உயிர்நீ தலைவா 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா 
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா 
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம் 
பின்னால் நிழலாய் வருவோம் 
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம் 
விழுந்தால் விதையாய் எழுவோம் 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தலைவா தலைவா தலைவா...

படம்                  : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : ஹரிச்சரன் & பூஜா 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்



No comments:

Post a Comment