Thursday, 20 June 2013

ஓர கண்ணால - உதயம் NH4




ஓர கண்ணால என்ன ஓரங்கட்டுறா 
ஜாடை காட்டியே ரொம்ப வாட்டி வதைக்கிறா 
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா 
வலைச்சிபோட்டேன்டா  ஒரு சோக்கு பிகரடா...

அறியா வயசுல... 
அளவா சைசுல.... 
அன்ன நடை நடந்து வரா 
கடலு மண்ணுல....

நாலு மொனை  ரோட்டுல 
நட ஒரு தினுசுல 
சத்தம் போட்டு சிக்னல் தரா 
வெள்ளி கொளுசுல ...

லைட் ஹவுசு வெளிச்சத்தை போல் காட்டுராடா ஜாலம் 
மனசுகுள்ள புள்ளி வெச்சு போடுறாடா கோலம் 
லைட் ஹவுசு வெளிச்சத்தை போல் காட்டுராடா ஜாலம் 
மனசுகுள்ள புள்ளி வெச்சு போடுறாடா கோலம் 

மாடி வீட்டுல ஒரு புள்ளி மானுடா 
கெடச்சி போச்சிடா நான் கேட்ட பீசு டா 

வெள்ளி கொளுசுல புது சத்தம் போட்டு தான் 
சின்ன மனசு தான் அவ வளைச்சு போட்டுட்டா 

காதல் பண்ணும் சோக்குல 
கட்டு மரம் கேப்புல 
காசிமேடு கடலு மண்ணுல வீடு கட்டுறா 

அலை இல்லா கடலுல 
துடுப்பில்லா படகுல
ஆடு புலி ஆட்டம் தானே ஆடி காட்டுரா 

அடக்கி புடிக்க முடியாத வங்க கடலு குதிர 
ஆக்டோபஸ் மீன போல வந்துட்டாலே எதிர 
அடக்கி புடிக்க முடியாத வங்க கடலு குதிர 
ஆக்டோபஸ் மீன போல வந்துட்டாலே எதிர 

ஓர கண்ணால என்ன ஓரங்கட்டுறா 
ஜாடை காட்டியே ரொம்ப வாட்டி வதைக்கிறா 
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா 
வலைச்சிபோட்டேன்டா  ஒரு சோக்கு பிகரடா...

மாய கண்ணால 
பிரபு-வ  மயக்கி பாத்தவ 
மாட்டி தவிக்குரா 
இப்போ வீட்டு சிறையில 

அந்த பிகரு முகத்த தான் 
இவன் பாக்க முடியல 
அவ வெள்ளி கொளுசுல 
இப்ப சத்தம் கேக்கல 

பாசம் என்னும் வலையில 
மாட்டிகிட்டு தவிக்குரா 
ஆதரவா அவளுக்கங்கே யாரும் இல்லடா 

நாலு பேரு சேர்ந்துட்டா 
ரெண்டு பேர பிரிச்சிட்டா 
காதல் என்ன காற்றினிலே கலைந்து போகுமா?....

சோகத்த நீ காதுல தான் பறக்க விடு நண்பா 
உன் மச்சான் சேத்து வைப்பான் நீ பீர்-அ  குடி தெம்பா 
சோகத்த நீ காதுல தான் பறக்க விடு நண்பா 
உன் மச்சான் சேத்து வைப்பான் நீ பீர்-அ  குடி தெம்பா.......


படம்                : உதயம் NH4
பாடல் வரிகள்   : கானா பாலா 
பாடியவர்கள்     : கானா பாலா 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்


No comments:

Post a Comment