Saturday, 29 June 2013

கனாவே கனாவே - அம்பிகாபதி (Kanaave Kanaave Lyrics - Ambikapathy(2013))

 

கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு 
வினாவோ வினாவோ உன் நெஞ்சில் இருக்கு 
கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு 
வினாவோ வினாவோ உன் நெஞ்சில் இருக்கு 

வீட்டுக்குள் மான்கள் படையெடுத்தோட  
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட 
திருமண வீடு திக்கு முக்கு ஆட 

குயிலே நடத்து ஒரு கலாட்டா 
  ஒரு  சுவை இல்லை ஒரு சண்டை இல்லாட்டா 
ஆ... துள்ளி  வரும் ஆறு என்றும் தேங்குவது இல்லை 
திருமண  வீடு என்றும் தூங்குவது இல்லை 
பாட்டிகள் எல்லாம் தாவணி போட 
தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் உடன் ஆட 
வாண்டுகள் எல்லாம் கை  கொட்டி ஆட 

ஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே 
வீடு வாசல் அது ரெண்டு படாதோ  
தேனின் முகத்தில் ஒரு ஈ ஒட்டாதே 
எங்கள் அகத்தின் துயர் நில்லாதே 
காற்றுக்கு கவலை ஓ... பாட தெரியாதே 
மருதாணி பூசி மகராணி ஆவோம் 
வண்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம் 

ஓ... வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ 
வாசலெல்லாம் விண்மீன் கொட்டாதோ கொட்டாதோ 
நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ 
நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ 
ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ 
தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ 
தேவதைகள் பல்லாண்டு பாடாதோ பாடாதோ 
திருமணமே சொர்க்கம் என்று ஆகாதோ ஆகாதோ

ஓ... விண்ணும் மண்ணும் கூடி ஓ... வாழ்த்தட்டுமே
மணமக்கள் வாழ்க மங்களம் வாழ்க 
மணமக்கள் வாழ்க மங்களம் வாழ்க 
ங்களம் வாழ்க  மங்களம் வாழ்க 

படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : மதுஸ்ரீ, வைசாலி, சின்மயீ, பூஜா, சரண்யா ஸ்ரீநிவாஸ் & அஞ்சால் சேதி 
இசை                 : A R ரஹ்மான் 

Wednesday, 26 June 2013

கலாரசிகா - அம்பிகாபதி (Kalaarasiga Lyrics - Ambikapathy(2013))


ஆ... ஓய்... ஓய்... ஓய்...
கலாரசிகா ஓய்... கலாரசிகா 
ஆ.... கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
மண்ணிலே விண்ணிலே பெண்ணிலே காணும் 
கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
கண்ணிலே கண்டதை கையிலே அல்லும் 
கலாரசிகா ஓய்... கலாரசிகா 

ஆ..ஆ....ஆ.... ஆ.... கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
ஆ..... கலாரசிகா
சாகசக்காரா 
ஒரு கைக்குட்டையை தந்து சேலையை திருடும் சதிகாரா 
காசியில் வந்து சில பாவங்கள் செய்து புண்ணியம் தேடும் பழிகாரா 
பொய்யால் எவரும் வாழ்ந்தது இல்லை 
மெய்யால் எவரும் வீழ்ந்தது இல்லை 
காற்றினை பிடித்து கயிறுகள் திரிக்கும் 
காசி கலாரசிகா ஓய்...காதல் கலாரசிகா 
காசிகலாரசிகா....

பொல்லாத காசி கலாரசிகா 
வாராய் காதல் கலாரசிகா 
கண் பாராய் காதல் கலாரசிகா 
கண் பாராய் காதல் கலாரசிகா 
காசி கலாரசிகா 
ஹோய்...ஹோய்.... காசி கலாரசிகா 

மண்ணிலே விண்ணிலே பெண்ணிலே காணும் 
கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
கண்ணிலே கண்டதை கையிலே அல்லும் 
கலாரசிகா ஓய்... கலாரசிகா 

மங்கையின் மனதை திருடும் கண்ணன் 
மந்திரம் தந்திரம் செய்வதில் மன்னன் 
பெண்களின் கண்களில் மண்களை தூவும் கலாரசிகா 
ஓ.... உண்மை என்னிடம் சொல்லு ஹே... கலாரசிகா 

ஆ.... கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
ஆசை கொண்ட மணமே 
பெரும் கங்கையை உன்னிரு கைகளில் அள்ளிட பார்க்கின்றாய் 
வீசும் மின்னல் ஒளியை 
உன் பைஜாமாவின் பைக்குள் ஒலித்திட பார்க்கின்றாய் 
வெற்றிகள் பெற்றவன் பூமிக்கு ராஜா 
வெற்றிலை போட்டவன் காசிக்கு ராஜா 
கண் ஜாடையால் பூட்டுகள் திறப்பாய் 
காசி கலாரசிகா... ஹோய்.... காதல் கலாரசிகா...
காதல் கலாரசிகா....

பொல்லாத காசி கலாரசிகா 
ஹோய் ஹோய்... காதல் கலாரசிகா 
பொல்லாத காசி கலாரசிகா 
ஹோய்... ஹோய்... காதல் கலாரசிகா 
காசி கலாரசிகா... பொல்லாத காசி கலாரசிகா 

மண்ணிலே விண்ணிலே பெண்ணிலே காணும் 
கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
கண்ணிலே கண்டதை கையிலே அல்லும் 
கலாரசிகா ஓய்... கலாரசிகா 

கலாரசிகா ஓய்... கலாரசிகா 
கலாரசிகா ஓய்.... கலாரசிகா 

படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : ஸ்வேதா மோகன்  
இசை                 : A R ரஹ்மான் 

Tuesday, 25 June 2013

அம்பிகாபதி - Ambikapathy Lyrics


ஓ... கங்கையிலே ஒரு வண்ண பறவை 
மூழ்கியதே நீரோடு 
அந்த பறவை கரை வந்தது 
அந்த பறவை கரை வந்தது 
அதிசயமா... தேவதையா....

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை 
மூகியதே நீரோடு 
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே 
கண்கள் கூசும் தேவதையாக 

அவளா அவளா பாரு 
அவள் அமராவதியா கேளு 
அம்பிகாபதி தான் நானு 
அமராவதி தான் யாரு 
அம்பிகாபதி தான் நானு 
அமராவதி தான் யாரு 
ஒ.... அமராவதி தான் யாரு 

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை 
மூகியதே நீரோடு 
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே 
கண்கள் கூசும் தேவதையாக 

அடி எனக்கு எனக்கு என்று துடிக்கும்  துடிக்கும் மனம் 
உனக்கு உனக்கு என்றதே 
தினம் தனக்கு தனக்கு என தவிக்கும் தவிக்கும் உள்ளம் 
நமக்கு நமக்கு என்று சொல்லுதே 
என்னை கவிஞன் கவிஞன் என்று கருதி கிடந்த 
ஒரு கர்வம் களைந்து விட்டதே 
உன்னை கடக்கும் பொழுது கண்ணில் அடிக்கும் அழகு 
என்னை கடையன் கடையன் என்று தள்ளுதே 
காசி நகர் வீதி பக்கம் வாடி 
கண்ணில் ஒன்றை பிச்சை போட்டு போடி....

அவளா அவளா பாரு 
அவள் அமராவதியா கேளு 
ஓ... அமராவதியா கேளு 

பல குழிகள் கடந்து வழி நடந்து நடந்து மனம்  
விழியில் விழுந்து விடுமே...
சிறு பூக்கள் தொடுப்பதற்கு கத்தி உனக்கெதற்கு 
ஊசி ஒன்று போதுமே...
உன்னை நினைத்து நினைத்து விழி நனைத்து நனைத்து 
உடல் இளைத்து இளைத்து விட்டதே... 
உயிர் தெறிக்க தெறிக்க உன்னை துரத்தி துரத்தி 
என்னை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே...
மண்ணில் வந்தோம் இன்னொரு பாதி தேடி 
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி 

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை 
மூகியதே நீரோடு 
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே 
கண்கள் கூசும் தேவதையாக 
அவளா அவளா பாரு 
அவள் அமராவதியா கேளு 
அம்பிகாபதி தான் நானு 
அமராவதி தான் யாரு 
அம்பிகாபதி தான் நானு 
அமராவதி தான் யாரு 
ஒ.... அமராவதி தான் யாரு 

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை 
மூகியதே நீரோடு 
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே 
கண்கள் கூசும் தேவதையாக 

படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : நரேஷ் ஐயர் 
இசை                 : A R ரஹ்மான் 

Monday, 24 June 2013

சொன்னதை செய்து முடிப்போம் - அம்பிகாபதி (Solvadhai Seidhu Mudippom Lyrics - Ambikapathy(2013) Song Lyrics)


hey... Say...
து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...

hey... Say...
து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...

மின்னல் வெட்டி பிறக்கட்டும் அறிவின் ஒளி 
மலரட்டும் மலரட்டும் திறந்த வெளி 
நியூட்டன் விதி அறிந்த பெண்ணே 
எதிர் வினை என்னடி இளைய கண்ணே... சொல்லடி...
சொன்னதை செய்து முடிப்போம் 
செய்வதை சொல்லி கொடுப்போம் 
சொன்னதை செய்து முடிப்போம் 
செய்வதை சொல்லி கொடுப்போம்

து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...

உலகில் உள்ள சாலைகள் எல்லாம் 
காதல் தேசம் சேரும் என் கண்ணே 
கல்வியும் கூட காதலடி 
காதலும் கூட கல்வியடி 
ஒன்றாய் மரத்தின் கிளைகள் 
நிழலாய் நிழலாய் கொடுக்கும் 
பூக்கள் எங்கே பூக்கும் 
புன்னகை போனால் வாழ்வா இனிக்கும் 

து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...
சொன்னதை செய்து முடிப்போம் 
செய்வதை சொல்லி கொடுப்போம்

நீ எதனை தருவாய் 
நீ அதனை பெறுவாயே 
கண்ணை கொடு பார்வை பெறுவாய் 
இதயம் கொடு அன்பை பெறுவாய் 
அன்பை கொடு ஆயிரம் பெறுவாய் 
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம் 
சொன்னதை செய்து முடிப்போம் 
செய்வதை சொல்லி கொடுப்போம்

செயலேதும் இல்லாமல் சொல்லாக நில்லாதே 
செயலேதும் இல்லாமல் சொல்லாக நில்லாதே 
இன்று நம்... விரல்கள் நடுவே 
இடைவெளி எதற்கு எதற்கு 
இன்னொரு கை கோர்த்து இணைவதற்கு 
மதி பாதி விதி பாதி  
இதுதான் இயற்கை விதி 
மதி ஒரு சிறகு விதி ஒரு சிறகு 
நிலா பூவில் தேன் குளிக்கும் 
பட்டாம்பூச்சி நீயும் நானும் 

து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...
து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...

து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...
து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...

படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : A R ரஹ்மான் & முஹம்மத் ரப்பீ 
இசை                 : A R ரஹ்மான் 

Sunday, 23 June 2013

தளபதி தளபதி - தலைவா (Thalaivaa - Thalapathy Thalapathy Lyrics)


தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா 
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா 
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம் 
பின்னால் நிழலாய் வருவோம் 
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம் 
விழுந்தால் விதையாய் எழுவோம் 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

தலைவா தலைவா தலைவா தலைவா 
தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா 

எதிரிகள் எதிரிகள் தம் தம் 
அலறிட அலறிட தம் தம் 
அனலென புறப்படு தம் தம் தோழா 
கெட்டதை கண்டதும் தம் தம் 
பட்டென சுத்திட தம் தம் 
கட்டளை இட்டிடு தம் தம் தோழா 

பிறர் துன்பம் தன துன்பம் போல் எண்ணினால் 
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் 
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே 
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான் 
உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை 
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை 
தலைவா தலைவா உயிர்நீ தலைவா 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

ஒருவிழி எரிமலை தம் தம் 
மறுவிழி பனிமலை தம் தம் 
இவனுக்கு நிகரில்லை தம் தம் தோழா 
நிலமது அதிர்ந்திட தம் தம் 
கடலது பொங்கிட தம் தம் 
கர்ஜனை புரிவான் தம் தம் தோழா 

அச்சங்கள் உனைகண்டு அச்சப்பட 
உச்சத்தை தொடவேண்டும் முன்னேறு நீ 
பத்தோடு பதினொன்று நீ இல்லையே 
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதானே நீ 
ஊரெங்கும் சந்தோசம் விளையாடுதே 
உன்னாலே அன்பெங்கும் அலைபாயுதே 
தலைவா தலைவா உயிர்நீ தலைவா 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா 
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா 
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம் 
பின்னால் நிழலாய் வருவோம் 
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம் 
விழுந்தால் விதையாய் எழுவோம் 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தலைவா தலைவா தலைவா...

படம்                  : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : ஹரிச்சரன் & பூஜா 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்