Sunday, 23 June 2013

தளபதி தளபதி - தலைவா (Thalaivaa - Thalapathy Thalapathy Lyrics)


தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா 
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா 
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம் 
பின்னால் நிழலாய் வருவோம் 
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம் 
விழுந்தால் விதையாய் எழுவோம் 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

தலைவா தலைவா தலைவா தலைவா 
தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா 

எதிரிகள் எதிரிகள் தம் தம் 
அலறிட அலறிட தம் தம் 
அனலென புறப்படு தம் தம் தோழா 
கெட்டதை கண்டதும் தம் தம் 
பட்டென சுத்திட தம் தம் 
கட்டளை இட்டிடு தம் தம் தோழா 

பிறர் துன்பம் தன துன்பம் போல் எண்ணினால் 
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் 
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே 
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான் 
உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை 
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை 
தலைவா தலைவா உயிர்நீ தலைவா 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

ஒருவிழி எரிமலை தம் தம் 
மறுவிழி பனிமலை தம் தம் 
இவனுக்கு நிகரில்லை தம் தம் தோழா 
நிலமது அதிர்ந்திட தம் தம் 
கடலது பொங்கிட தம் தம் 
கர்ஜனை புரிவான் தம் தம் தோழா 

அச்சங்கள் உனைகண்டு அச்சப்பட 
உச்சத்தை தொடவேண்டும் முன்னேறு நீ 
பத்தோடு பதினொன்று நீ இல்லையே 
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதானே நீ 
ஊரெங்கும் சந்தோசம் விளையாடுதே 
உன்னாலே அன்பெங்கும் அலைபாயுதே 
தலைவா தலைவா உயிர்நீ தலைவா 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 

தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா 
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா 
எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம் 
பின்னால் நிழலாய் வருவோம் 
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம் 
விழுந்தால் விதையாய் எழுவோம் 

தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தளபதி தளபதி  நீதான் என்றும் தளபதி 
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி 
தலைவா தலைவா தலைவா...

படம்                  : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : ஹரிச்சரன் & பூஜா 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்



வாங்கனா வணக்கம்னா - தலைவா (Thalaivaa - Vaangana Vanakangana Lyrics)



வாட் ப்ரோ?... ஹ்ம்ம் 
நடனம்... ஹ்ம்ம் ஹ்ம்ம் 
சாங்கா?.....  பாங்கு....
யாரங்கே? ப்ரோ க்கு ஒரு பாங்கு...
ஹ்ம்ம் 
வாட் அகைன் பாங்கு?...
இல்ல சாங்கு...
சாங்கு... எங்க பாடு... 

வாங்கனா வணக்கம்னா  
அண்ணா அண்ணா என்னன்னா? 
மை சாங்க நீ கேளுங்கணா 
அண்ணா அண்ணா சரியா புரியலனா 

வாங்கனா வணக்கம்னா 
மை சாங்க நீ கேளுங்கணா 
நான் ஒளரல ஒலரலனா 
ரொம்ப பீலிங் பீலிங்குணா 

ஹே "ஆ" னானா "ஊ" னானா உன் ஆல தேடி போவ 
நீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ 
அவ லேட்டா தான்ணா டாட்டா சொல்வா 
பின்னால போவாத 

ஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா 
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா 
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா 
கொட்டுது காதல் தத்துவம்னா 

வாங்கனா வணக்கம்னா 
மை சாங்க நீ கேளுங்கணா 
நான் ஒளரல ஒலரலனா 
ரொம்ப பீலிங் பீலிங்குணா 

லைப் ஒரு "போட்"ங்கனா 
சேப்டியா ஒட்டுங்கனா 
லவ் ல மாட்டிகிட்டா சேத்துல சிக்கிடும்னா 
ஹிட்லர் டார்ச்சர் எல்லாம் 
ஹிஸ்டரி பேசுதுனா 
இவளுங்க டார்ச்சர் எல்லாம் 
யாருமே பேசலானா 
fact Fact 
விஸ்கி பீர் போதைதான் 
மூணு ஹவரில் போகும்னா 

அப்படி விழுந்த நான் எழுந்துட மாட்டேன்னா 
எகிறுது...

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா 
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா 
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா 
கொட்டுது காதல் தத்துவம்னா 

வாங்கனா வணக்கம்னா 
மை சாங்க நீ கேளுங்கணா 
நான் ஒளரல ஒலரலனா 
ரொம்ப பீலிங் பீலிங்குணா 

சாட்டர்டே டேட்டிங்னு கூட்டிட்டு போவானா 
ஆக்டிங் ஆக்டிங்குனா ஐயோ ஆஸ்கர் ஆக்டிங்குனா 
ஆமாங்க ஆமாங்க 
ஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப் ஆகிடுணா 
ஸ்கூட்டில ஏத்திக்குவா டெட் எண்டு பாத்துக்கணா 

கைய வீசி நீயும் தான் கண்ணாம்பூச்சி ஆடுவ 
கண்ணை திறக்கும்போது தான் 
உன்னை நீயும் தேடுவ 
கவிதை கவிதை 
பட்டவன் சொல்லுறேன் காதலே வேணாம்னா 

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா 
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா 
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா 
கொட்டுது காதல் தத்துவம்னா 

வாங்கனா வணக்கம்னா 
மை சாங்க நீ கேளுங்கணா 
நான் ஒளரல ஒலரலனா 
ரொம்ப ஹே... ஹே... ஹே... ணா...

 ஹே "ஆ" னானா "ஊ" னானா உன் ஆல தேடி போவ 
நீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ 
அவ லேட்டா தான்ணா பாய் பாய் சொல்வா 
பின்னால டோன்ட் டோன்ட் கோ 

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா 
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா 
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா 
கொட்டுது காதல் தத்துவம்னா

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா 
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா 
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா 
கொட்டுது காதல் தத்துவம்னா

come bro you come bro 
en songa you Hear hear bro 
blaber blaber bro 
only feeling feeling bro

படம்                  : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : விஜய் & சந்தானம் 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்

தமிழா தமிழா தமிழ் பசங்க - தலைவா (Thamizha Thamizha - Thalaivaa)



த த த த தமிழா 
த த த த தமிழா 
த த த த தமிழா 
தமிழா தமிழா தமிழா தமிழா 
தமிழா தமிழா தமிழா தமிழா 
தமிழா தமிழா 

பயணம் தொடங்கும் தலைகனமும் அடங்கும் 
அரங்கம் அதிரும் தருணம் அரங்கேற்றம் முடியட்டும் 
விடியும்பொழுதும் எனக்கென உதயமாகட்டும் 
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும் 
புகழது பரவட்டும் தமிழா தமிழா 
உயர நீ பறந்திடு தமிழா தமிழா 
த.... மிழ்..... ப.... சங்.... க.....

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ 
ஐ ஒ ஓ ஹௌ அக்கனா 
கசட தபற யரல வழல 
ஙஞன நமண தமிழன் நான் 

எங்கிருந்தாலும் ஓ... 
நாங்க என்ன செஞ்சாலும் ஓ....
தமிழோடு தானே ஓ....
எங்க சந்தோசம்... சங்கீதம் வ... வ... வ...
பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க... 
பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க.... 
இந்த பூமியை  அதிரவைப்போம் 
நாங்க தமிழ் பசங்க.... 

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு 
சென்னை கானா பாட்டு நாங்க இரசிப்போம் 
காஞ்சி பட்டு சேலை 
பசு மாடு சுத்தும் சாலை 
நாத்து நாடும் வேலை 
பாட்டு படிப்போம் 

எங்கள் மயிலாட்டமும் கொஞ்சும் உயிலாட்டமும் 
கோவில் கரகாட்டமும் அதிரும் 
எங்கள் தெரு கூத்திலும் 
எங்கள் இசை பாட்டிலும் 
மெல்லிசைகள் துள்ளி வரும் வ... வ... வ...

பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க... 
பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க.... 
இந்த பூமியை  அதிரவைப்போம் 
நாங்க தமிழ் பசங்க.... 

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ 
ஐ ஒ ஓ ஹௌ அக்கனா 
கசட தபற யரல வழல 
ஙஞன நமண தமிழன் நான் 

காஷ்மீர் எல்லைக்கு ரெண்டு காலு குதிரை 
ஆழம் தெரியாமல் மச்சி காலை நீயும் விடுற 
அட்டபோட்ட பாத்தா  நாங்க தங்கமான பசங்க 
போட்டின்னு வந்துட்டா கிழிக்கும் நம்ம தமிழ் பசங்க 
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா 
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிர 
என் ஒவ்வொரு அசைவும் நடனும் அமைக்கும் பாரடா 
ஊருக்குள்ள நம்ம போல செல்லபிள்ளை யாரடா 

பூ போல் இட்லி தோசை 
அட முறுக்கி வச்ச மீசை 
கூழ குடிக்க ஆசை 
பச்சை தமிழா 

வெளுத்து வச்ச வேட்டி 
பல கதைகள் சொல்லும் பாட்டி 
கபடி கபடி போட்டி வீர தமிழா 

கண்ணாம்பூச்சி ஆடுவோம் 
ஜல்லிகட்டோடுவோம் 
வெற்றிக்கொடி நாட்டுவோம் தமிழா 

சங்க தமிழ் பாட்டிலும் 
திருக்குரலீட்டிலும் 
முக்குளித்து மூழ்கிவிடவா வ... வ...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ 
ஐ ஒ ஓ ஹௌ அக்கனா 
கசட தபற யரல வழல 
ஙஞன நமண தமிழன் நான் 

எங்கிருந்தாலும் ஓ... 
நாங்க என்ன செஞ்சாலும் ஓ....
தமிழோடு தானே ஓ....
எங்க சந்தோசம்... சங்கீதம் வ... வ... வ...
பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க... 
பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க.... 
இந்த பூமியை  அதிரவைப்போம் 
நாங்க தமிழ் பசங்க.... 

படம்                : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : பென்னி தயாள் 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்


யார் இந்த சாலையோரம் - தலைவா (Yaar intha saalaiyoram - Thalaivaa)


யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்ததோ 
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது 
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது 
இன்று பேசாமல் கண்கள் பேசுது 

நகராமல் இந்த நொடி நீல 
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே 
குளிராலும் கொஞ்சம் அனலாலும் 
இந்த நெருக்கம் தான் கொல்லுதே 
எந்தன் நாளானது இன்று வேறானது 
வண்ணம் நூறானது வானிலே 

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்ததோ 
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது 

தீர தீர ஆசை யாவும் பேசலாம் 
மெல்ல தூரம் விலகி போகும்வரையில் தள்ளி நிற்கலாம் 
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் 
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம் 
என்னாகிறேன் என்று ஏதாகிறேன் 
எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன் 
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது 
அது பறந்தோடுது வானிலே 

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது 
இன்று பேசாமல் கண்கள் பேசுது 

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே 
அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே 
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே 
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் 
என்றும் மண்ணிலே 
கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி 
என் பாதையில் இன்று உன்காலடி 
நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும் 
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி 

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்ததோ 
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது 
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது 
இன்று பேசாமல் கண்கள் பேசுது 
நகராமல் இந்த நொடி நீல 
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே 
குளிராலும் கொஞ்சம் அனலாலும் 
இந்த நெருக்கம் தான் கொல்லுதே 
எந்தன் நாளானது இன்று வேறானது 
வண்ணம் நூறானது வானிலே 

படம்                : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : ஜீ வீ  பிரகாஷ் குமார் & சைந்தவி 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்