Sunday, 23 June 2013

வாங்கனா வணக்கம்னா - தலைவா (Thalaivaa - Vaangana Vanakangana Lyrics)



வாட் ப்ரோ?... ஹ்ம்ம் 
நடனம்... ஹ்ம்ம் ஹ்ம்ம் 
சாங்கா?.....  பாங்கு....
யாரங்கே? ப்ரோ க்கு ஒரு பாங்கு...
ஹ்ம்ம் 
வாட் அகைன் பாங்கு?...
இல்ல சாங்கு...
சாங்கு... எங்க பாடு... 

வாங்கனா வணக்கம்னா  
அண்ணா அண்ணா என்னன்னா? 
மை சாங்க நீ கேளுங்கணா 
அண்ணா அண்ணா சரியா புரியலனா 

வாங்கனா வணக்கம்னா 
மை சாங்க நீ கேளுங்கணா 
நான் ஒளரல ஒலரலனா 
ரொம்ப பீலிங் பீலிங்குணா 

ஹே "ஆ" னானா "ஊ" னானா உன் ஆல தேடி போவ 
நீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ 
அவ லேட்டா தான்ணா டாட்டா சொல்வா 
பின்னால போவாத 

ஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா 
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா 
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா 
கொட்டுது காதல் தத்துவம்னா 

வாங்கனா வணக்கம்னா 
மை சாங்க நீ கேளுங்கணா 
நான் ஒளரல ஒலரலனா 
ரொம்ப பீலிங் பீலிங்குணா 

லைப் ஒரு "போட்"ங்கனா 
சேப்டியா ஒட்டுங்கனா 
லவ் ல மாட்டிகிட்டா சேத்துல சிக்கிடும்னா 
ஹிட்லர் டார்ச்சர் எல்லாம் 
ஹிஸ்டரி பேசுதுனா 
இவளுங்க டார்ச்சர் எல்லாம் 
யாருமே பேசலானா 
fact Fact 
விஸ்கி பீர் போதைதான் 
மூணு ஹவரில் போகும்னா 

அப்படி விழுந்த நான் எழுந்துட மாட்டேன்னா 
எகிறுது...

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா 
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா 
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா 
கொட்டுது காதல் தத்துவம்னா 

வாங்கனா வணக்கம்னா 
மை சாங்க நீ கேளுங்கணா 
நான் ஒளரல ஒலரலனா 
ரொம்ப பீலிங் பீலிங்குணா 

சாட்டர்டே டேட்டிங்னு கூட்டிட்டு போவானா 
ஆக்டிங் ஆக்டிங்குனா ஐயோ ஆஸ்கர் ஆக்டிங்குனா 
ஆமாங்க ஆமாங்க 
ஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப் ஆகிடுணா 
ஸ்கூட்டில ஏத்திக்குவா டெட் எண்டு பாத்துக்கணா 

கைய வீசி நீயும் தான் கண்ணாம்பூச்சி ஆடுவ 
கண்ணை திறக்கும்போது தான் 
உன்னை நீயும் தேடுவ 
கவிதை கவிதை 
பட்டவன் சொல்லுறேன் காதலே வேணாம்னா 

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா 
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா 
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா 
கொட்டுது காதல் தத்துவம்னா 

வாங்கனா வணக்கம்னா 
மை சாங்க நீ கேளுங்கணா 
நான் ஒளரல ஒலரலனா 
ரொம்ப ஹே... ஹே... ஹே... ணா...

 ஹே "ஆ" னானா "ஊ" னானா உன் ஆல தேடி போவ 
நீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ 
அவ லேட்டா தான்ணா பாய் பாய் சொல்வா 
பின்னால டோன்ட் டோன்ட் கோ 

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா 
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா 
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா 
கொட்டுது காதல் தத்துவம்னா

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா 
மனச நீ கொஞ்சம் தேத்திக்கணா 
குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சினா 
கொட்டுது காதல் தத்துவம்னா

come bro you come bro 
en songa you Hear hear bro 
blaber blaber bro 
only feeling feeling bro

படம்                  : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : விஜய் & சந்தானம் 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்

தமிழா தமிழா தமிழ் பசங்க - தலைவா (Thamizha Thamizha - Thalaivaa)



த த த த தமிழா 
த த த த தமிழா 
த த த த தமிழா 
தமிழா தமிழா தமிழா தமிழா 
தமிழா தமிழா தமிழா தமிழா 
தமிழா தமிழா 

பயணம் தொடங்கும் தலைகனமும் அடங்கும் 
அரங்கம் அதிரும் தருணம் அரங்கேற்றம் முடியட்டும் 
விடியும்பொழுதும் எனக்கென உதயமாகட்டும் 
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும் 
புகழது பரவட்டும் தமிழா தமிழா 
உயர நீ பறந்திடு தமிழா தமிழா 
த.... மிழ்..... ப.... சங்.... க.....

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ 
ஐ ஒ ஓ ஹௌ அக்கனா 
கசட தபற யரல வழல 
ஙஞன நமண தமிழன் நான் 

எங்கிருந்தாலும் ஓ... 
நாங்க என்ன செஞ்சாலும் ஓ....
தமிழோடு தானே ஓ....
எங்க சந்தோசம்... சங்கீதம் வ... வ... வ...
பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க... 
பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க.... 
இந்த பூமியை  அதிரவைப்போம் 
நாங்க தமிழ் பசங்க.... 

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு 
சென்னை கானா பாட்டு நாங்க இரசிப்போம் 
காஞ்சி பட்டு சேலை 
பசு மாடு சுத்தும் சாலை 
நாத்து நாடும் வேலை 
பாட்டு படிப்போம் 

எங்கள் மயிலாட்டமும் கொஞ்சும் உயிலாட்டமும் 
கோவில் கரகாட்டமும் அதிரும் 
எங்கள் தெரு கூத்திலும் 
எங்கள் இசை பாட்டிலும் 
மெல்லிசைகள் துள்ளி வரும் வ... வ... வ...

பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க... 
பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க.... 
இந்த பூமியை  அதிரவைப்போம் 
நாங்க தமிழ் பசங்க.... 

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ 
ஐ ஒ ஓ ஹௌ அக்கனா 
கசட தபற யரல வழல 
ஙஞன நமண தமிழன் நான் 

காஷ்மீர் எல்லைக்கு ரெண்டு காலு குதிரை 
ஆழம் தெரியாமல் மச்சி காலை நீயும் விடுற 
அட்டபோட்ட பாத்தா  நாங்க தங்கமான பசங்க 
போட்டின்னு வந்துட்டா கிழிக்கும் நம்ம தமிழ் பசங்க 
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா 
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிர 
என் ஒவ்வொரு அசைவும் நடனும் அமைக்கும் பாரடா 
ஊருக்குள்ள நம்ம போல செல்லபிள்ளை யாரடா 

பூ போல் இட்லி தோசை 
அட முறுக்கி வச்ச மீசை 
கூழ குடிக்க ஆசை 
பச்சை தமிழா 

வெளுத்து வச்ச வேட்டி 
பல கதைகள் சொல்லும் பாட்டி 
கபடி கபடி போட்டி வீர தமிழா 

கண்ணாம்பூச்சி ஆடுவோம் 
ஜல்லிகட்டோடுவோம் 
வெற்றிக்கொடி நாட்டுவோம் தமிழா 

சங்க தமிழ் பாட்டிலும் 
திருக்குரலீட்டிலும் 
முக்குளித்து மூழ்கிவிடவா வ... வ...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ 
ஐ ஒ ஓ ஹௌ அக்கனா 
கசட தபற யரல வழல 
ஙஞன நமண தமிழன் நான் 

எங்கிருந்தாலும் ஓ... 
நாங்க என்ன செஞ்சாலும் ஓ....
தமிழோடு தானே ஓ....
எங்க சந்தோசம்... சங்கீதம் வ... வ... வ...
பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க... 
பசங்க... பசங்க... 
தமிழ் தமிழ் பசங்க.... 
இந்த பூமியை  அதிரவைப்போம் 
நாங்க தமிழ் பசங்க.... 

படம்                : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : பென்னி தயாள் 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்


யார் இந்த சாலையோரம் - தலைவா (Yaar intha saalaiyoram - Thalaivaa)


யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்ததோ 
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது 
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது 
இன்று பேசாமல் கண்கள் பேசுது 

நகராமல் இந்த நொடி நீல 
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே 
குளிராலும் கொஞ்சம் அனலாலும் 
இந்த நெருக்கம் தான் கொல்லுதே 
எந்தன் நாளானது இன்று வேறானது 
வண்ணம் நூறானது வானிலே 

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்ததோ 
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது 

தீர தீர ஆசை யாவும் பேசலாம் 
மெல்ல தூரம் விலகி போகும்வரையில் தள்ளி நிற்கலாம் 
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் 
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம் 
என்னாகிறேன் என்று ஏதாகிறேன் 
எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன் 
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது 
அது பறந்தோடுது வானிலே 

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது 
இன்று பேசாமல் கண்கள் பேசுது 

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே 
அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே 
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே 
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் 
என்றும் மண்ணிலே 
கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி 
என் பாதையில் இன்று உன்காலடி 
நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும் 
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி 

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்ததோ 
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது 
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது 
இன்று பேசாமல் கண்கள் பேசுது 
நகராமல் இந்த நொடி நீல 
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே 
குளிராலும் கொஞ்சம் அனலாலும் 
இந்த நெருக்கம் தான் கொல்லுதே 
எந்தன் நாளானது இன்று வேறானது 
வண்ணம் நூறானது வானிலே 

படம்                : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : ஜீ வீ  பிரகாஷ் குமார் & சைந்தவி 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்

Friday, 21 June 2013

சொல் சொல் சொல் அன்பே நீ சொல் - தலைவா (Sol Sol Sol Anbe Nee Sol-Thalaivaa Song Lyrics)


சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் 
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல் 

ஒரு மஞ்சள் மேகம் வந்து 
நெஞ்சில் மோதியதும் 
காதல் சாரல் என்னை தாக்க 
அந்தி மாலை சூரியனும் மேற்கில் 
வந்து நின்று 
உன்னை என்னை ஒன்று சேர்க்க 

என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே 
உன் நெருக்கம் வேண்டுதே கண்ணே கண்ணே 

சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் 
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல் 

ஒரு மஞ்சள் மேகம் வந்து 
நெஞ்சில் மோதியதும் 
காதல் சாரல் என்னை தாக்க 
அந்தி மாலை சூரியனும் மேற்கில் 
வந்து நின்று 
உன்னை என்னை ஒன்று சேர்க்க 

கனவுகள் கேட்குது நீ வர 
கைவிரல் கேட்குது நீ தொட 

யாரோ என்னை பார்க்கும் 
ஒரு எண்ணம் தோன்றிட 
நீயும் என பார்ப்பேன் 
அதை எங்கே சொல்லிட 

என் நேரம் இன்று அவசரமாக மாறிப்போனதே 
என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே 

இலைகளில் பனித்துளி விழுவதும் 

வெய்யில் வந்து அது மெல்ல இழுவதும் 
இயற்கையில் நடக்கிற ரகசியம் அன்பே அன்பே 


சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 


ஒரு மஞ்சள் மேகம் வந்து 
நெஞ்சில் மோதியதும் 
காதல் சாரல் என்னை தாக்க 
அந்தி மாலை சூரியனும் மேற்கில் 
வந்து நின்று 
உன்னை என்னை ஒன்று சேர்க்க 

இருவரும் ஒரு மொழி பேசலாம் 

இடையினில் மௌனத்தில் பேசலாம் 

பெண்ணே என் நெஞ்சம் என்னும் பூட்டை திறக்க 

கண்ணே உன் கண்கள் அது சாவி கொடுக்க 
என் பேரினில் உன் பேரினை சேர்க்க ஆசை வந்ததே 
உன் தொழில் எந்தன் தோல் வந்து சாய நேரம் வந்ததே 

இது இது இது ஒரு இன்பமா 

இது இது இது ஒரு துன்பமா 
இன்பமும் துன்பமும் சேர்ந்தததா சொல்வாய் பெண்ணே 
சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 


ஒரு மஞ்சள் மேகம் வந்து 
நெஞ்சில் மோதியதும் 
காதல் சாரல் என்னை தாக்க 
அந்தி மாலை சூரியனும் மேற்கில் 
வந்து நின்று 
உன்னை என்னை ஒன்று சேர்க்க 



என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே 
உன் நெருக்கம் வேண்டுதே கண்ணே கண்ணே 
சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் 
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல் 

படம்                : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : விஜய் பிரகாஷ், மேகா 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்

இன்னும் கொஞ்சம் நேரம் - மரியான் (Innum Konjam Neram Lyrics-Mariyaan Song Lyrics)


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 
இன்னும் பேச கூட தொடங்கலையே 
நெஞ்சமும் கொஞ்சமும் நெறயலையே  
இப்போ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே 
இன்னும் பேச கூட தொடங்கலையே 
நெஞ்சமும் கொஞ்சமும் நெறயலையே  
இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன் 

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 

இதுவரைக்கும் தனியாக என் மனசை 
அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே 
எதிர்பாரா நேரத்துல இதயத்துல 
வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே 
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல 
வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையலை போல 
உன் கண்ணுக்கேத்த அழகு இரு காத்திருடா கொஞ்சம் 
உன்ன இப்படியே சேர்ந்தாலும் தித்திக்குமே நெஞ்சம் 

இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன  
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே 
இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன  
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே 

கடல் மாதா ஆடையாக உயிரோடு 
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன் 
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே 
உன்னிடம் சொல்லவே தயங்குதே 
இந்த உப்பு காத்து இனிக்குது 
உன்னையும் என்னையும் இழுக்குதே 
உன்னை இழுக்க என்னை இழுக்க 
என் மனசு நெறையுமே 
இந்த மீன் உடம்பு வாசன 
என்ன நீ தொட்டதும் மணக்குதே 
இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன் 

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 

நீ என் கண்ணு போல இருக்கணும் 
என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும் 
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும் 
நீ சொந்தமாக கிடைக்கணும் 
நீ சொன்னதெல்லாம் நடக்கணும் 
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாகணும் 

படம்                : மரியான்  
பாடல் வரிகள்   : கபிலன் 
பாடியவர்கள்     : விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் 
இசை                 : A R ரஹ்மான்